திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நன்கொடை மூலம் புதியதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் பிரிவு கட்டிடத்தை திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை இயக்குநர் மருத்துவர் மாரிமுத்து, மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணியம், வாணியம்பாடி நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், அரசு மருத்துவர் டி.செந்தில்குமார், நன்கொடையாளர்கள் எம்.ஆர்.சிவக்குமார், டி.சரவணன் மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment