வாணியம்பாடி சி.எல்.சாலையில் இயங்கி வருகிறது பிரபல தங்க நகை கடை (எல்.எஸ்.கே. ஜூவல்லரி), இந்த தங்க நகைகடையில் கிட்டதட்ட 7 லட்சம் மதிப்பிலான 10 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நகை கடையின் உரிமையாளர் விஜயராவ் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் இக்கொள்ளைச்சம்பவம் குறித்து நகை கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்க்கொண்டதில், நகை கடையில் வெள்ளி நகை விற்பனை பொறுப்பாளராக பணியாற்றும் ரியாஸ் அஹமது என்பவர் 10 கிலோ மதிப்பிலான வெள்ளி நகைகளை ஒருவட காலத்திற்க்கும் மேலாக அவ்வப்போது கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது,
இதனை தொடர்ந்து ரியாஸ் அஹமதுவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் பணிபுரியும் நகை கடையில் தொடர்ந்து ஒருவடத்திற்க்கும் மேலாக அவ்வப்போது வெள்ளிநகைகளை ஊழியரே கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை
No comments:
Post a Comment