திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த வருடத்தின் முதல் எருது விடும் நடைபெற்றது. ஊர் பொதுமக்களின் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீராகள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த எருது விடும் திருவிழாவில் முதல் பரிசு தொகையாக 60001 நிர்ணயிக்கப்பட்டது மேலும் குறைந்த நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை எட்டிய காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த பாதுகாப்பு பணியில் கந்திலி போலீசார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:
Post a Comment