தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் பகுதியில் நடைபெற்ற கபாடி போட்டியை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏழுமலை, வீரப்பன், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், மாவட்ட திமுக தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை

No comments:
Post a Comment