இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு! மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு! மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.


கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு நிலானூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் திருப்பதி (22) ஜேசிபி ஆபரேட்டர் இவர் இன்று திருப்பத்தூர் அடுத்த பூரிகமானிமிட்டா பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் அருண்குமார்(22)  திருப்பத்தூருக்கு படம் பார்க்க வந்து கொண்டிருந்தார் அப்போது இருவரும்  சிகே ஆசிரமம் பகுதியில் தங்களுடைய  பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தது நேர் எதிரே இருவரும் மோதிக்கொண்டனர், இருவரும் தூக்கி எறியப்பட்டு மயக்கமடைந்தனர்.


பின்னர் அருகில் இருந்தவர்கள்  108 ஆம்புலன்ஸில் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் திருப்பதி வரும் வழியில் இறந்து விட்டது தெரிய வந்தது.


கவலைக்கிடமான நிலையில் அருண்குமார் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், காணும் பொங்கல் திருநாளில் இருசக்கர வசனங்கள்  மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/