இதனை தொடர்ந்து விழா தொடங்குவதற்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் எழுதுகள் ஓடும் பாதை மற்றும் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்பு துவங்கப்பட்ட இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 150 காளைகள் கலந்து கொண்டன. மேலும் குறிப்பிட்ட தூரத்தை குறுகிய நொடிகளில் கடந்த காளைக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் தொடர்ந்து கடைசி பரிசாக ஆறுதல் பரிசு உட்பட 41 பரிசுகளும் வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த எருது விடும் திருவிழா மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மே.அண்ணாமலை
No comments:
Post a Comment