இந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி எருது விடும் விழா நடைபெற்று வந்ததால் காவல்துறை விழா குழுவினரிடம் விழாவை நிறுத்தும்படி அறிவுறுத்தினர். அப்போது 2.30 மணி அளவில் திடீரென எருது ஒன்று சீறிப் பாய்ந்தது. இதனால் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் மகன் முஷரப் (19) என்கிற இளைஞரை மாடு முட்டியதில் லேசான காயத்துடன் கீழே விழுந்தார். இதனை அறியாமல் போலீசார் சாரா மாறியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே அதிக ரத்தங்கள் வெளியேறி மயக்கம் அடைந்தார். மேலும் முறையான மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சக நண்பர்களே மூசரப்பை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

அதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முஷரப் இறந்துவிட்டதாக தெரிந்த தகவலை அடுத்து ஆத்திரம் அடைந்த 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் விழா மேடையின் அருகே போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நார்சாம்பட்டி எருது விடும் திருவிழாவில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment