திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களின் செயலை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பரத் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபு கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் தமிழ்நாடு ஆளுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்கள்.

இந்தஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் விஜய் இளஞ்செழியன், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வர்த்தக சங்க பிரிவு தலைவர் முருகன், திருப்பத்தூர் ஒன்றிய ஒன்றிய தலைவர் ஜானி ஜாவித், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நெடுமாறன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இன்னால் முன்னால் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment