ஆண்டு தோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூர் பகுதியில் மஞ்சு விரட்டு என்று சொல்ல கூடிய எருது விடும் திருவிழா நடத்துவது வழக்கம். கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட காளைகளை மந்தையில் ஓடவிட்டு அதில் எந்த காளை நேரம் குறைவாக இலக்கை அடைகிறதோ அந்த காளைக்கு பரிசுகள் வழங்குவது வழக்கம் அப்படி இருக்கையில் நேற்று கல்நார்சம்பட்டியில் எருது விடும் திருவிழாவில் எருதுகளை மிகவும் துன்ப படுத்தி வேகம் அதிகரிக்க மாட்டை சித்ரவதை செய்துள்ளனர்.
மாடு வேகம் எடுக்க வேண்டும் என்பதற்காக மாட்டின் மூக்கில் கயிறு கட்டி இருக்குவது, மாட்டின் வாலை கடிப்பது, கடுமையாக தாக்குவது என்று 5 அறிவு ஜீவனை துன்புறுத்தி உள்ளனர். இதே வரிசையில் நேற்றைய தினம் காளைகளை விட நேரம் அகிகரிக்க கோரி பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கும் போதே எருதுகளை மாட்டின் உரிமையாளர்கள் வேண்டும் என்றே காளையை அவிழ்த்து விட்டுள்ளனர். இதனால் காளை துள்ளி குதித்து ஓட தொடங்கி எதிரில் இருந்த நபர்களை பந்தாடி உள்ளது. அப்போது போலீசார் ஒருவரின் கையை மாடு கிழித்துவிட்டு பின்னர் முஷ்ரப் என்ற வாலிபரை குத்தி சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் பேசி கொண்டு இருக்கும்போதே காளையை அவிழ்த்து விடுவதா என்று லேசான தடியடி நடத்தி உள்ளனர். அப்போது ரத்த எதும் இல்லாமல் விழுந்து கிடந்த வாலிபரை போலீசார் எழுந்து போடா என்று கூறி உள்ளனர். ஆனால் அந்த வாலிபரை எழ முடியவில்லை இதனை அறிந்த பொதுமக்கள் நடந்தது என்ன என்று தெரியாமல் போலீசார் தாக்கி வாலிபருக்கு காயம் ஏற்பட்டது என்று வதந்தி பரப்பி பெரியதாக உருவாக்கி உள்ளனர்.
இந்த விவகாரம் காட்டு தீயாக பரவி போலீசார் அடித்து தான் வாலிபர் இறந்து விட்டார் என்று நம்பபட்டது. கல்நார்சம்பட்டியில் நடந்த விழாவை கான ஏராளமான வாலிபர்கள் குடி போதையில் இருந்துள்ளனர். இதனால் போலீசாரை கடுமையாக தக்கி உள்ளனர். இதனால் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு மண்டை உடைந்தது. கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் 39 பேரை போலீசார் தட்டி தூக்கி உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட நபர்கள் மீது பொது சொத்து சேதபடுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கல்நார்சம்பட்டி மக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment