திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், அக்ரஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி கலந்து கொண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேசை மற்றும் இருக்கைகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.சாமுடி, மாவட்ட கவுன்சிலர் ஜெயாசுந்தரேசன், இந்திரவர்மன், சக்திபாண்டியன் மற்றும் திமுகவினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment