புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா; சட்ட மன்ற உறுப்பினர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 January 2023

புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா; சட்ட மன்ற உறுப்பினர் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் நெக்குந்தி சிகர்னப்பள்ளி மற்றும் நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியம்,  பச்சூர் ஜெயந்திபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் க.தேவராஜி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார்,  ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை மத்திய திமுக ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.சாமுடி, திமுக பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதிமுனிசாமி, மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, திமுக மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், சங்கரபாண்டியன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 

- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/