ஏலகிரி மலை கிராமத்தில் செயல் விளக்கம் அளித்தார்கள் மாணவிகள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

ஏலகிரி மலை கிராமத்தில் செயல் விளக்கம் அளித்தார்கள் மாணவிகள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.


பாலாறு வேளாண்மை கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவ  திட்டம் மூலம்  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாணவிகள் 75 நாட்கள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் வழங்கி வருகின்றனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கிராமத்தில்  கே.லக்ஷ்மி தீபிகா என்ற மாணவி நீலம் ஒட்டும் பொறியை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார்கள்.

இதன் மூலம் நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள் இலைப்பேன், ஸ்டென்கீட்டோதிரிப்ஸ் பைபார்மிஸ் என்று சொல்லக்கூடிய ஒரு வகை பூச்சி  நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் இதனை கட்டுப்படுத்த நீலம் ஒட்டும் பொறியை வயலில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் இவ்வகை பூச்சியை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.இந்த செயல்முறை விளக்கத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


வகுப்பு ஆசிரியர் வெண்ணிலா மேரி மற்றும் உதவி பேராசிரியர் வேளாண் விரிவாக்கத்துறை சு.வைத்தீஸ்வரி மாணவிகளை பங்கு பெற செய்து  உற்சாகப்படுத்தி செயல்முறை விளக்கம் அளிக்க உதவி செய்தனர்.  இதில் செயல்முறை விளக்கம் அளித்த குழு மாணவிகள் அ.ர.கார்த்திகா, ப. கார்த்திகா, ர.காவியா, சு.கீர்த்தனா, ம.லலிதா, கே.லக்ஷ்மி தீபிகா, அ.லயீக்கா  ஃபர்ஹீன், சா.மணிஷா, சே.மோனிகா.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/