திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியம், நாயணசெருவு ஊராட்சி வெள்ளைக்குட்டையன் வட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ நாகலம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மேலும் கொத்தூரில் நடைபெறும் திருவிழா அழைப்பிதழை பொதுமக்கள் அவரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதிமுனிசாமி, நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் டி.தேவராஜி, மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment