தன்னுடைய பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

தன்னுடைய பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா.


திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தன்னுடைய பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நெல்லிவாசல் நாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை எனக் கூறி ஒன்றிய சேர்மன் மற்றும் BDOவை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர் பிரபாவதி கூட்டத்தின் மத்தியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


அதனைத் தொடர்ந்து இதுகுறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/