புதுப்பேட்டை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஜோலார்பேட்டை ஒன்றிய 15வது மாநாடு நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 February 2023

புதுப்பேட்டை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஜோலார்பேட்டை ஒன்றிய 15வது மாநாடு நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் உள்ள சின்னராஜி நினைவரங்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஜோலார்பேட்டை ஒன்றிய 15வது மாநாடு ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. ஏஐகேஎஸ் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான இரா முல்லை மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

மேலும் இந்த மாநாட்டில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து செட்டேரி அணைக்கு கால்வாய் அமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். நெடுங்கல் அணையில் இருந்து    தென்பெண்ணை ஆறு கல்லாறு வழியாக பாலாற்றுடன் இணைக்கும் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒன்றியத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகளுக்கு போதுமான மழை பெய்தும் நீர் வராமல் உள்ளதால் நீர் வரத்து கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர்.


மேலும் சிபிஐ மாவட்ட செயலாளர் சுந்தரேசன் மாநில உப குழு உறுப்பினர் சாமிக்கண்ணு மாவட்ட செயலாளர் நந்தி மாநில குழு உறுப்பினர் கண்ணு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துரை தெரிவித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/