திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்களில் கருப்பு துணி கட்டியும் தவளைப் போல் தவழ்ந்து கொண்டும் வருவாய்த்துறை அதிகாரிகளை எதிர்த்து குறவன் இன மக்கள் நான்காவது நாள் போராட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 March 2023

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்களில் கருப்பு துணி கட்டியும் தவளைப் போல் தவழ்ந்து கொண்டும் வருவாய்த்துறை அதிகாரிகளை எதிர்த்து குறவன் இன மக்கள் நான்காவது நாள் போராட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் பழங்குடி குறவன் இனம் சங்கம் சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளியை புறக்கணித்து சான்றிதழ் கேட்டு  இரவு பகல் பாராமல் அங்கேயே 4 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் முட்டி போட்டு ஜாதி சான்றிதழ்  பிச்சை கேட்கும் போராட்டம்! தர்ணா போராட்டம்! காத்திருப்பு போராட்டம்! பள்ளி புறக்கணிப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில்  நான்காவது நாளான இன்று வெயில் என்றும் பொருட்படுத்தாமல் தவளை போல் தவழ்ந்து கொண்டு குறவன் இன மக்களும் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/