மேலும் இதற்கு முன்பு இந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வாணியம்பாடி ஆம்பூர் நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை உள்ளிட்ட திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்கு முன்பு சீல் வைத்து பிறகு ஒவ்வொருவராக வரிசையில் நின்று கூட்ட அரங்கில் அமர்ந்துள்ள மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து வந்தார்கள்.

இதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வரிசையில் நின்று செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் மனு கொடுக்க வரும் பொது மக்களை நேரடியாக கூட்ட அரங்கில் உள்ள நாற்காலிகளில் அமர வைத்து தானே நேரில் வந்து பொதுமக்களை சந்தித்து துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து மனு மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தவிர்க்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்தில் இருந்து விடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment