ஆம்பூரில் விதிமுறைகளை மீறி சாலையின் எதிர்புரம் வந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து. +2 மாணவன் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 February 2023

ஆம்பூரில் விதிமுறைகளை மீறி சாலையின் எதிர்புரம் வந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து. +2 மாணவன் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முஹமதுபுறா மசூதி தெருவை சேர்ந்தவர் முஹம்மத் ஃபுர்ஹான். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வரும் நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விதிமுறைகளை மீறி சாலையின் எதிரே எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரி சான்றோர்குப்பம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது லாரியின் மீது முஹம்மத் ஃபுர்ஹான் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மாணவன் முஹம்மத் ஃபுர்ஹான் தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/