மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமில் 28 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் உதவி உபகரணங்களை ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 February 2023

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமில் 28 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் உதவி உபகரணங்களை ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமில் 28 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். 

உடன் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பாலாஜி, வட்டாட்சியர்கள் திரு.சம்பத், திரு.பழனி, மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஹேமலதா அனைவருக்கும் கல்வி உதவித் திட்ட திரு.பிரபாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/