திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தில் சுமார் 200 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த சுயம்பாக உருவாகிய பிரசித்தி பெற்ற மூல முதற் கடவுள் மாய ஸ்ரீ மாய விநாயகருக்கு நான்கு யாககுண்டம் அமைத்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக திருவிழாவில் காலை 9 மணி முதல் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, ஸ்ரீ கணபதி ஓமம்,லட்சுமி ஓமம், விநாயகர் பூஜை, தீபாராதனை, ஸ்ரீ ராஜ கோபுர விமான கோபுரங்களுக்கு தானியம் கலசம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலச குண்டலத்தோடு மீது புனித நீர் ஊற்றி பின்னர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக திருவிழாவில் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment