மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக் கட்டங்களுக்கு அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
அனைத்து தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் கிழக்குபதனவாடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 42 பள்ளிகளில் ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் 93 வகுப்பறைகள் கட்டடங்கள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் அடிக்கல் நட்டுவைத்து தொடங்கி வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, உதவி திட்ட அலுவலர் திரு.செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.பிரபாவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment