தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் - உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 February 2023

தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் - உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.கே.ரமேஷ் தலைமையில் நிம்மியம்பட்டு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.விஜயா முன்னிலையில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நிம்மியம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.எழிலரசி வெங்கடேசன் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.பிரீத்தா பழனி நிம்மியம்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் திரு.மணி முதலான உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது சிறப்புரையாற்றிய ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி. MD., மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு தொற்றின் பாதிப்புகள், பரவும் முறைகள் மற்றும் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் கை கழுவுதலின் முக்கியத்துவம் பற்றி செயல்முறை விளக்கம் அளித்தார்.


இந்நிகழ்வின் போது சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.குரு.சரவணகுமார் நன்றி தெரிவித்தார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/