திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு காற்றலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரியில் இஞ்சினில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது.

இதனால் லாரி சாலை நடுவில் நின்றது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிராமிய போலீசார் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றினர்.
லாரி ஓட்டுநர் என்ஜீனில் ஏற்பட்ட பழுதினை சுமார் 2 மணி நேரத்திற்க்கு பின்னர் சரி செய்தார். பின்னர் இரு பாதைகளில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் வாகனம் வரிசை கட்டு ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


No comments:
Post a Comment