ஆம்பூர் அருகே பாலாற்றில் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் பைப் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி செல்கின்றன. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 February 2023

ஆம்பூர் அருகே பாலாற்றில் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் பைப் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி செல்கின்றன.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வழியாக பாலாற்றில் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு  செல்லும் காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் உடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி செல்கின்றன.


ஏற்கனவே ஆம்பூர்,மாதனூர்,வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்து வருவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் பைப் லைன் உடைந்து ஆற்றில் செல்லும் வெள்ள நீரில் பல்வேறு கழிவுகள் காவிரி கூட்டு குடிநீரில் கலப்பதால் அதனை  பயன்படுத்தும் பொதுமக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு துறைசார்ந்த உயர் அதிகாரிகள் உடனடியாக உடைந்த பைப் லைன் சரி செய்து வேலூர், ராணிப்பேட்டை பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர்  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/