வாணியம்பாடி நகர காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைகவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 February 2023

வாணியம்பாடி நகர காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைகவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமை வகித்தார். போக்கு வரத்து காவல் ஆய்வாளர் லக்ஷ்மணன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசுகையில் -

சாலை விதிகளை மதித்து பெருமதிப்பிற்குரிய உயிர்களை காப்போம், அனைவரும்  தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டவேண்டும், அப்போது தான் விபத்து ஏற்படும் போது எளிதில் உயிரை காப்பாற்ற முடியும், மக்கள்  பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார். பின்னர் சாலையில் ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டி வந்த நபர்களை பாராட்டி டிபன் பாக்ஸ், ரோஜா பூ மற்றும் சாக்லேட் வழங்கினார்.


தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல்  வந்த நபர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகர தனிப்பிறிவு காவலர் திங்களன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் . 

No comments:

Post a Comment

Post Top Ad

*/