ஆம்பூர் அடுத்த சின்ன வாரிகம் பகுதியில் உள்ள பரிதா குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் தீ விபத்து. தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 February 2023

ஆம்பூர் அடுத்த சின்ன வாரிகம் பகுதியில் உள்ள பரிதா குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் தீ விபத்து. தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் பகுதியில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் வெளியேற்றப்படும் காலணி கழிவுகளை தொழிற்சாலைக்கு பின்புறம் சேமிக்க வைக்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் காலணி கழிவுகள் கொட்டப்பட்டுள்ள  இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவி எரிந்தது.

இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீவிபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டதில், ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன் இத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடம் மற்றும் இரும்பு பொருட்களை கேஸ்  வெல்டிங் வைத்து அகற்றிய போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக  காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும் ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பிலான காலணி உதிரிபாகங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/