திருப்பத்தூர் மாவட்டம் குறும்பேரியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் சுமார் 200 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர் பள்ளியில் குடிநீர் கழிவறை மற்றும் சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் போன்ற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்த நிலையில்
குரும்பேறி ஊராட்சி மன்ற தலைவர் ராமன் முயற்சியில் பெங்களூரு சென்னை போன்ற பெருநகரங்களில் மென்பொருள் அலுவலகத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக சுமார் 60 இளைஞர்கள் கொண்ட குழு குறும்பேறி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியை தத்தெடுத்து சுமார் இரண்டு லட்ச ரூபாய் பொருட்செலவில் தாங்களே பள்ளியை சுத்தம் செய்தல் சுவற்றுக்கு வண்ணம் பூசுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு பள்ளியை சுத்தமாகவும் அழகாகவும் மாற்றி காட்டினார்.
மேலும் பள்ளி மாணவர்களுடன் பாட்டுப் பாடி நடனமாடி அவர்களை மகிழ்வித்தனர், இதுபோன்று உதவி தேவைப்படும் பள்ளிகளுக்கும் தாங்கள் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை


No comments:
Post a Comment