வாணியம்பாடியில் எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து சேதம். 2 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 February 2023

வாணியம்பாடியில் எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து சேதம். 2 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் ஏஷானுள்ளா. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள தேனீர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று எலக்ட்ரிக் பைக்  வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார்.

இந்நிலையில் அதிகாலை தன் எலக்ட்ரிக் பைக் திடீரென்று தீ பிடித்து எறிந்துள்ளது. இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து  உடனடியாக வீட்டை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கி வீடு முழுவதும் புகை  காட்சியளித்ததால் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் கூச்சலிட்டனர். சப்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு மணல் எடுத்து வீசி  தீயை அணைக்க முயன்றுள்ளனர்.


நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக் குள் கொண்டு வந்தனர். இருப்பினும் எலக்ட்ரிக் பைக் முழுவதும் எறிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. மேலும் அத்துடன் ஒரு சைக்கிலும் தீயில் கருகியது. இந்த புகை மூட்டம் காரணமாக வீட்டில் இருந்த கரிபினி பெண் உட்பட 2 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நகர போலிசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எலக்ட்ரிக் பைக் தீ விபத்து குறித்து அந்த பைக் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/