வாணியம்பாடி நகரில் கடந்த 30 ஆண்டு காலமாக தமிழை வளர்ப்பதற்காக முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் பல்வேறு வகையில் பாடுபட்டு வருகின்றனர், முதலில் செடிகளை வைப்பது போல வைத்து அதனை மரமாக வளர்த்து ஆளாக்கி உள்ளனர். நாம் ஒவ்வொருவரும் தமிழை ஏன் கற்க வேண்டும் என்று சிந்தனையை கொண்டு வர வேண்டும்.

நான் ஒரு முறை பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ரயில் நிலையத்திற்கு நின்று கொண்டிருந்தேன், அங்கு வந்த பயணி ஒருவரிடம் இந்த வண்டி எப்போது எங்கு செல்கின்றது என்று நான் ஆங்கிலத்தில் கேட்டேன். உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று, அதற்கு அவர் ஆங்கிலத்தில் பதில் கூறுகிறார். எனக்கு ஜெர்மனி மொழி தான் தெரியும் என்று, இதை பார்த்த போது நான் நினைத்தேன் மொழியே தெரிந்தாலும் பேச மாட்டார்கள் போல் உள்ளது, பிரான்ஸ் ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஏன் தொழிலில் முன்னேறி வருகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்களின் தாய் மொழியை கற்றுக்கொண்டு அதன் மூலம் சிந்தனையை வளர்த்து தொழிலை வளர்த்துள்ளனர்.
ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்றால் தன் சொந்த தாய்மொழியை வளர்த்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் நாம் முன்னேற முடியும் அதன் மூலம் சிறந்த சிந்தனைகளை உருவாக்கி தங்களின் தாய்மொழி மூலம் வளர்ந்து ஆளாக முடியும், எல்.கே.ஜி முதல் தமிழில் முழுமையாக கற்றுத் தர வேண்டும் பிற மொழியான ஆங்கில மொழியை கற்றுக் கொண்டாலும் அது கூடுதல் மொழியாக தான் இருக்க வேண்டும்.
இது போன்று நாம் எல்லா இடங்களிலும் எக்காரணத்தை கொண்டும் தமிழை விடாமல் படித்து வந்தால் ஒரு காலத்திலும் தமிழை அழிக்க முடியாது. நான் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிய போது இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்து வந்தேன், தற்போதுள்ள காலகட்டத்தில் நில அதிர்வை கூட காகமும், நாய்களும் குறைப்பதால் மட்டுமே நமக்குத் தெரியும் நிலை உள்ளது. நாம் கல்வி கற்று நம்முடைய சிந்தனைகளை வளர்த்தால் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலையை அடையலாம் என பேசினார், தொடர்ந்து யானை தந்தம் என்ற தலைப்பில் கவிதை படித்தார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர். விசாகப்பெருமாள் எழுதிய கவிராட்டினம் என்ற கவிதையின் நூலையும், முனைவர் கோட்டீஸ்வரன் எழுதிய கவிச்சாலை என்ற கவிதை நூலையும் வெளியிட்டார், வெளியிட்ட புத்தகத்தை நகரமன்றத் தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் புத்தக மதிப்பு உரையை சென்னை கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜகோபாலன், உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ், குன்றத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முனைவர் அந்தோணி டேவிட் நாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக நடைபெற்ற சூழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளி தாளாளர் எம். செந்தில் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் நெறியாளராக பேராசிரியர் ராமச்சந்திரன் மனித மாணாபுறப் பெரிதும் தேவை என்ற தலைப்பில், அறிவு அல்ல அன்பே என பாரதியும், அன்பு அல்ல அறமே என எழிலரசியும், அறம் அல்ல அறிவே என்ற தலைப்பில் கோவை. சுல்தானா பர்வீன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து நடைபெற்ற சுழறங்கும் நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பட்டியலில் முகமது யூசுப் தலைமை தாங்கினார். இஸ்லாமிய கல்லூரி முதல்வர் முகமது இலியாஸ் முன்னிலை வைத்து பேசினார். வாழ்க்கை ஒரு வரம் என்ற தலைப்பில் வாசுகி சீனிவாசகம் பேசினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


No comments:
Post a Comment