திருப்பத்தூர் மாவட்ட 3 வது ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் இன்று பொறுப்பேற்று கொண்டார்!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

திருப்பத்தூர் மாவட்ட 3 வது ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் இன்று பொறுப்பேற்று கொண்டார்!.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள ஆய்வில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு ஆய்வுக்கு பிறகு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்று 3வது மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்று கொண்டார். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன், பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் அதற்காக என்னுடைய அறை கதவுகள் திறந்தே இருக்கும் என்றும் இந்த மாவட்டத்தில் உள்ள மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உரிய ஆய்விற்கு பிறகு செய்து தரப்படும் என்றும் கூறினார். 


அவருடன் அவரது மனைவி கவிதா, அவரது மகன் குகவேல், மகள் மோனோமிர்தனேயா ஆகியோர் இருந்தனர். மாவட்ட அதிகாரிகள் புதிய ஆட்சியரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/