இதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் காசி மாவட்ட செயலாளர் சரவணன் சிஐடியு மாவட்ட செயலாளர் பரசுராமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள். அப்போது நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள பணி ஓய்வு பெறும் இடங்களை அவுட் சோர்சிங் முறையில் பணி அமர்த்துவதை கைவிட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை குறைந்தபட்ச கூலி சட்ட அடிப்படையில் வழங்க வேண்டும். 80 ஆண்டுகளாக டிஎம்சி காலனியில் வாழ்ந்து வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அதே இடத்தில் பட்டா வழங்கி இலவச வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் துப்புரவு தொழிலாளர்கள் இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் சி பி எம் மாவட்ட குழு நிர்வாகி ஜாபர் சாதி க் செயலாளர் காசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை


No comments:
Post a Comment