திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் சிமெண்ட் சாலை மற்றும் தார் சாலை 15 கோடி மதிப்பில் இனி ஒதுக்கப்பட்டு அமைக்க நகராட்சி மூலம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதில் சிமெண்ட் சாலை போட ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த ரெஜி கோட்டிங் சிஸ்டம் என்கிற நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை தெரு 9வது வார்டு ஆயில் டிப்போ தெருவில் 78 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சாலை தரமற்ற இருப்பதாகவும் கீழே இருக்கும் மண்ணை தோண்டி எடுக்காமல் அதன் மீது சிமெண்ட் கலவை போடப்பட்டுள்ளது எனவும் மேலும் மட்டம் கட்டாமலும் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர் என திமுக கவுன்சிலர்கள் சரவணன், கோபி, அபூபக்கர்,சுதாகர், ஆகியோர் சாலை போடும் பணியை நிறுத்தினர்.
இது குறித்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி மற்றும் பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் இருவரும் காரில் வந்தனர். ஆனால் உமா மகேஸ்வரி காரிலேயே அமர்ந்திருக்க பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மட்டும் இறங்கி வந்து கவுன்சிலரிலிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பேசிய கவுன்சிலர் கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லையா? நம்ம ஆட்சியில் இந்த கேவலமான நிலைமை எங்களுக்கு வர வேண்டுமா? திருப்பத்தூர் நகராட்சி என்ன அராஜகம் செய்கிறதா? என கேள்வி கேட்டனர். ஆனால் இவ்வளவு நடந்தும் நகராட்சி பொறியாளர் காரில் இருந்து இறங்கவில்லை இதனால் கவுன்சிலர்கள் கடுப்பாகினர்.
மேலும் முறையான பதில் அளிக்காமல் நகராட்சி பொறியாளர் காரில் அமிர்தபடியே பார்த்து விட்டு சென்றதால் நகர மன்ற தலைவரை அழைத்து இது குறித்து பேசப்படும் என கவுன்சிலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். மேலும் மக்கள் வரி பணத்தில் போடப்படும் தார்சாலையை தரமற்றதாக போடுவதாக திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் மீது திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:
Post a Comment