திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு நகர மன்ற 36- வார்டு உறுப்பினர் வெற்றி கொண்டான் திடீர் தர்ணா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 February 2023

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு நகர மன்ற 36- வார்டு உறுப்பினர் வெற்றி கொண்டான் திடீர் தர்ணா.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது இதில் நகர மன்ற தலைவராக சங்கீதா வெங்கடேசன் செயல்பட்டு வருகிறார். 36 வார்டு கவுன்சிலர் வெற்றிக்கொண்டான் தன்னுடைய வார்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை அளந்து நூலகம் மற்றும் அரசு சம்பந்தமான கட்டிடம் கட்ட திருப்பத்தூர் நகராட்சியின் திட்ட ஆய்வாளர் கவுசல்யாவிடம் மனு அளித்தார் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று காலை திடீரென திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் இதனால் பரபரப்பாக காணப்படுகிறது. 

தன்னுடைய வார்டு பொதுமக்கள் தன்னிடம் பலமுறை வார்டுக்கு ஏதும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர் அதனால் பலமுறை திருப்பத்தூர் நகராட்சி நகர மன்ற தலைவரிடமும் கமிஷனர் மற்றும் நகராட்சி திட்ட ஆய்வாளர் கவுசல்யா  அவர்கள்  மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்  கூறி இந்த தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  


தன்னை அவதூறாக பேசும்  நகராட்சி திட்ட ஆய்வாளர் கவுசல்யா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.  கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது இதனால் நகராட்சி பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.  அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


-  மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/