வாணியம்பாடியில் மயானக்கொள்ளை திருவிழாவில் அசுரனின் கண் முட்டைகளை எடுக்க அலைமோதிய பக்தர்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 February 2023

வாணியம்பாடியில் மயானக்கொள்ளை திருவிழாவில் அசுரனின் கண் முட்டைகளை எடுக்க அலைமோதிய பக்தர்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மயானக்கொள்ளை திருவிழா நடைப்பெற்றது.


விழாவில் அங்காளம்மன் சிலை மற்றும் பூங்கரக ஊர்வலம், கேரள செண்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க திருவீதி உலா நடைபெற்றது. இதில் பூங்கரகம் பாலாற்றுக்கு வந்தவுடன் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைப்பெற்றது. பின்னர் அங்கு  வடிவமைக்கப்பட்டிருந்த அசூரனின் சிலையின் கண் முட்டைகளை எடுக்க பக்தர்கள், மற்றும் இளைஞர்கள்  அலைமோதினர்.


விழாவினை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பாதுகாப்பு பணி குறித்து மேற்கொண்டு சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுப்படுத்தப்பட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/