திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலை வரை பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் டி கே மோகன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார், கந்திலி துணை சேர்மன் மோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment