பொம்மிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 February 2023

பொம்மிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டம்.


திருப்பத்தூர்  பொம்மிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலூர் பாலாறு வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு  மாணவர்கள் சார்பில்  போதைப்பொருள் ஒழிப்பு  பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. வேலூர் பாலாறு வேளாண்மைக் கல்லூரியில்  இறுதியாண்டு பயிலும்  மாணவர்கள் திருப்பத்தூர் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சி பெற்றுவருகின்றனர். 



இதில் மாணவர்கள் விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடி புதுப்புது வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பொருட்டு திருப்பத்தூர் பொம்மிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மணிவண்ணன் தலைமை தாங்கினார். பாலாறு வேளாண்மைக் கல்லூரி மாணவர் டிராவிட்அரசு வரவேற்புரை  நிகழ்த்தினார். 

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அகிலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பற்றியும் அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரை நிகழ்த்தினார். பிறகு மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாணவர் தனுஷ்குமார் நன்றியுரை தெரிவித்தார்


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/