அகரம் அடுத்த தாதனவலசை பகுதியை சேர்ந்த கன்னிகா இந்துமதி இவருடைய மகன் கவியரசு ஆறாம் வகுப்பு இந்த பள்ளியில் படித்து வருகிறான், இவன் சிறு வயதிலிருந்து எதையாவது சாதிக்கவேண்டும் என்று படிப்பில் ஆர்வம் காட்டி வந்துள்ளான் கொரோனா ஊரடங்கு காலத்தில் திருக்குறள் மீது ஆர்வம் காட்டி வந்துள்ளான் சமீபத்தில் நடைபெற்ற ஏலகிரி மலை நிகழ்ச்சியில் 750 திருக்குறளை மனப்பாடமாக கூறி பரிசுகள் பெற்றுள்ளார்.
மீண்டும் இந்நிலையில் இன்று 133 அதிகாரம் கொண்ட 1330 திருக்குறளை ML குடியண்ணன் தலைமையில் மற்றும் ஷெப்பர்ட் ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மணி முன்னிலையில் கவியரசு 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் நிகழ்ச்சியில் சுமார் ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் பார்க்காமல் ஒப்புவித்து அசத்தி காட்டினான் இவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவனை ஊக்கிவிக்கும் வகையில் 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
பேட்டி. கவியரசு கூறுகையில் நான் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது கடந்த கொரோனா ஊரடங்கு களத்தில் திருக்குறள் மீது ஆர்வம் கட்டி படித்து வந்தேன் நிலையில் ஏலகிரி மலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று 750 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பவித்து பரிசுகள் பெற்றுள்ளேன் மீண்டும் இன்று பள்ளி நிர்வாகம் சார்பில் 133 அதிகாரம் கொண்ட 1330 திருக்குறளை ஒப்பிவித்தேன் நான் முதல்வரிடம் பரிசுகள் வாங்க வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் நான் எதிர்காலத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம் என்று கூறினான்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment