வாணியம்பாடி அருகே தனியார் பேருந்து மூலம் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 February 2023

வாணியம்பாடி அருகே தனியார் பேருந்து மூலம் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு தனியார் பேருந்துகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான வருவாய்த் துறையினர் வாணியம்பாடி அருகே அண்ணாநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆந்திர மாநில நோக்கி சென்ற தனியார் பேருந்து சோதனையிட்ட போது அதில் சுமார் 250 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து தும்பேறி பகுதியில் சாலை ஓரம் பாழடைந்த வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளி மாநிலத்திற்கு கடத்த பதக்கி வைத்திருந்த சுமார் 250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை வாணியம்பாடி நுகர் பொருள் வாணிப கடைங்கில் ஒப்படைத்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/