ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்க விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 February 2023

ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்க விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக  2022 மற்றும் 23 ஆம் ஆண்டின் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான  விளையாட்டு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி துவக்கி வைத்தார்.


இந்த விளையாட்டு போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கபடி கைப்பந்து கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாட உள்ளனர். 


இன்று முதல் 24 ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் லட்சுமி திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உமா கண்ணுறங்கம், சத்யா சதீஷ், காவியா விக்டர் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/