வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் திடீர் ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 February 2023

வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் திடீர் ஆய்வு.


திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.த.ரா.செந்தில் MBBS.,DPH.,MPH., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

மேலும் வள்ளிப்பட்டு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். வள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வந்த மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை வீடுவீடாக சென்று அனைவருக்கும் சரியான மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.  


ஆய்வின் போது நமது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் மரு. ச. பசுபதி. MD., வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு. சங்கீதா. MBBS., செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/