தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தனியார் டேங்கர் லாரிகள், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் சேமிப்பு கிடங்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா எஸ் வாகனம் ஒன்று தீயில் எறிந்து சேதமானது. மேலும் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள் துண்டு தோள்கள் உட்பட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.
விபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விஷமிகள் யாரேனும் தீ வைத்துள்ளாரா, அல்லது மின் கசிவு போன்ற காரணங்களால் தீ பற்றியதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயணைப்பு துறையினர் சாதுரியமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் யாருக்கும் எந்தவித காயங்கள்யின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.


No comments:
Post a Comment