மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் சாலை பாதுகாப்பு விதிகள், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கணேஷ் அவர்கள் பொதுமக்களுக்கு மாணவர்களுக்கும் வாகன பேரணி நடத்தி முக்கிய இடங்களில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வாணியம்பாடி உட்கோட்டம், நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் திருமதி .சாந்தி, வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் திரு.மஞ்சுநாதன் அவர்கள் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் நடத்தியும், வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.லட்சுமணன் அவர்கள் மஜ்ஹருஷ் உலூம் உயர் நிலைப்பள்ளி, வாணியம்பாடி. மாணவர்களுக்கும் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முக்கிய இடங்களில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
ஆம்பூர் உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களும் பொதுமக்களுக்கும் முக்கிய இடங்களில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment