அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட்டிருந்தும் அதனை அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் கண்டு கொள்ளாமல் மாவட்ட ஆட்சியரின் வாகனங்கள் வரும் வழியிலேயே இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

இதன் காரணமாக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி டிராபிக் போலீஸ்சாருக்கு கொடுத்த உத்தரவின்படி இன்று டிராபிக் போலீஸார் நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் வாகனங்களுக்கு அபராதம் போட்டனர். மேலும் இது குறித்து சில அதிகாரிகள் டிராபிக் போலீஸாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் டிராபிக் போலீஸார் இது மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவு எனவே எதுவாக இருந்தாலும் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக்கூறி வாகன எண்ணை குறித்துக்கொண்டு அபராதம் போட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளின் இருசக்கர வாகனத்திற்கு அபராதம் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment