திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் கிராமத்தில் அருள்மிகு சுந்தர சுவாமி மற்றும் காலபைரவர் மகா கும்பாபிஷேக திருவிழா ஊர் மக்கள் தேவராஜ், ஜெயசங்கர், வெங்கடேசன், மகாராணி ராமநாதன், பன்னீர்செல்வம் முருகேசன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மங்கள இசை, மகா கணபதி பூஜை, வாஸ்து ஓமம், இரண்டாம் கால பூஜை, மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது, கோபுரத்தின் மேலே உள்ள கலச குண்டலத்தோடு மீது புனித நீர் ஊற்றி பின்னர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10,00க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment