கேரள மாநிலத்தைச் சேர்ந்த தினகரன் என்பவருடைய மகன் டிஜேஷ்(25) என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் பைனல் இயர் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் நேற்று கல்லூரிக்கு செல்லும் போது திருப்பத்தூர் அருகே தர்மபுரி பிரிட்ஜ் கீழே வரும்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த டிஜேஷ் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில் இரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் காலையில் அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை


No comments:
Post a Comment