திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமில் 28 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ரூ.47 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பாலாஜி, முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன்குமார், நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் திருமதி.சசிகலா சூரியகுமார், வட்டாட்சியர் திரு.குமார் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment