திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய ஒன்றியத்திற்குட்பட்ட இமயம் கலைக்கல்லூரியில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் (வேலூர்) மற்றும் ரெட் ரிப்பன் கிளப் (இமயம் கலைக் கல்லூரி) இணைந்து போதைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியானது போராசிரியர் திரு.ராஜாராம் அவர்களின் தலைமையிலும் நிறுவனர் முனைவர் திரு.சரவணன் மற்றும் கல்லூரி முதல்வர் திரு. சீனிவாசன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவ அலுவலர் மரு. ச.பசுபதி MD, அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு "போதையின் தீமைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இறுதியில் "Say No to Drug" எனும் சுலோகம் கூறி அதனை மாணவர்களை திரும்ப கூறச் சொல்லி உறுதிமொழி எடுக்கப்பட்டது.உடன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. சரவணகுமார் மற்றும், சுகாதார பணியாளர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை

No comments:
Post a Comment