திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையம் பட்டு கிராமத்தைச் கோபிகிருஷ்ணன் மகன் சஞ்சய் பிரசாத் இவர் கிரி சமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் வளைய பந்து விளையாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டியில் ஜோனல் மற்றும் ஸ்டேட் சப் ஜூனியர், சப் ஜூனியர் நேஷனல் உள்ளிட்ட போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார், இதன் காரணமாக மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு வளைய பந்து போட்டி கடந்த 3ஆம்தேதி முதல் வருகின்ற 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது கலந்து கொள்வதாக இருந்த சஞ்சய் பிரசாதை அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ் மற்றும் மோகன் என்பவர் உனக்கு வயது அதிகமாகி விட்டது. அதன் காரணமாக இப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது என பொய்யாக தகவல் கூறி தன்னை விளையாட்டில் பங்கேற்க விடாமல் நிறுத்தியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் உடற்கல்வி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மேலும் சப் ஜூனியர் விளையாட்டில் பங்கேற்பதற்கு பதினாறு வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் 06.04.2008 அன்றுதான் பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சியரிடம் சஞ்சய் பிரசாத் ஒப்படைத்தார் அதனைத் தொடர்ந்து 15 வயது தொடரவே இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது.
என்னை வேண்டுமென்றே நிராகரிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் வயதை காரணம் காட்டி பொய்யாக என்னை நிராகரிக்கிறார்கள் என வருத்தம் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை

No comments:
Post a Comment