இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் தங்கி உள்ள வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு உறங்க சென்ற நிலையில் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இருசக்கர வாகனத்தில் பொருத்திருந்த ஜிபிஎஸ் கருவிலிருந்து ஜெயபெருமாள் செல்போனில் குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்து விழித்துக் கொண்ட ஜெயகாந்தன், நண்பர்கள் உதவியுடன் இருசக்கர வாகனம் செல்லும் பாதையை காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது திருடப்பட்ட இரு சக்கர வாகனம் நீண்ட நேரமாக ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள காட்டு கொள்ளை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜிபிஎஸ்யில் காண்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்பூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் உதவியுடன் காட்டுக் கொள்ளை பகுதிக்கு விரைந்த ஜெயபெருமாள் அங்கு இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பெங்களூருவில் இருந்து திருடி வந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், அஜய், சக்திவேல், விஷ்வா, கணேஷ் ஆகிய 5 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை உரிமையாளரே ஜிபிஎஸ் வசதியுடன் பின்தொடர்ந்து கொள்ளையர்களை காவல்துறையினிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment