திருப்பத்தூர் அருகே ஒரு கோடி மதிப்பு மதிப்பில் போடப்பட்ட தார்சாலை ஒரு மாதத்தில் குண்டும் குழியமாக மாறிய அவலம்! பொதுமக்கள் குற்றச்சாட்டு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

திருப்பத்தூர் அருகே ஒரு கோடி மதிப்பு மதிப்பில் போடப்பட்ட தார்சாலை ஒரு மாதத்தில் குண்டும் குழியமாக மாறிய அவலம்! பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி பகுதியில் இருந்து அங்கநாதவலசை வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டு 1கோடியே 2லட்சம் மதிப்பில் 2.200 கிலோமீட்டர் அளவில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த யோகலட்சுமி ப்ளூ மெட்டல் இண்டஸ்ட்ரீஸ் என்ற  பெயரில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1மாதங்களுக்கு முன்புதான் குரும்பேரி பகுதியில் இருந்து அங்கநாதவலசை வரை தார் சாலை போடும் மணி மேற்கொள்ளப்பட்டது.


இந்த நிலையில் தார் சாலை போடப்பட்ட ஒரு மாதத்திலேயே ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர்  தார் சாலை போடும் நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் புதிதாக போடப்பட்ட தார் சாலைகளில் இருந்து பெயர்ந்து வந்த ஜல்லி கற்களை  பொதுமக்கள்  வாரி இறைத்து ஆதங்கம் தெரிவித்தனர்.


மேலும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு டெண்டர் எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தார்ச்சாலை தற்போது ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்டு அதுவும் குண்டும் குழியுமாக தரமற்ற முறையில் காட்சியளிப்பதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/